பறவைகள்சரணாலயம் வேட்டங்குடிபட்டி
தமிழகத்தில் சுமார் 360 வகையான "பறவைகள்" வாழ்ந்து வருகின்றன.நீர் நிலைகளில் உள்ள பறவைகளை பாதுகாக்க 13 பகுதிகளை "பறவைகள் சரணாலயங்களாக" அறிவித்துள்ளன. அவ்வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும்.
பறவை இனங்கள்

![]() |

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் வட்டம்,வேட்டங்குடி,பெரிய கொள்ளுக்குடிபட்டி,சிறிய கொள்ளுக்குடிபட்டி நீர்நிலைகளில்
அமைந்துள்ளது "வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்" சுமார் 38.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். காரைக்குடியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இந்த இடம் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
பறவை இனங்கள்
- உண்ணி கொக்கு
- முக்குளிப்பான்
- நீலச்சிறவி
- சமர்பல் நிற நாரை
- இரவு நாரை
- பாம்புதாரா
- கருநீல அறிவாள் மூக்கன்
- கரண்டி வாயன்
- நத்தை கொத்தி நாரை
போன்ற 217 வகையான சுமார் 8,000 வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது.
இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் காலையில் இரை தேடி சென்று விட்டு மாலையில் சரணாலயத்துக்கு வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.
இப்பறவைகள் ஆண்டுதோறும் செப்டெம்பர் -அக்டோபர் மாதங்களில் இங்குள்ள நீர்நிலைகளை நாடி வருகின்றன.பின்பு இனப்பெருக்கம் முடிந்து,ஏப்ரல் -மே மாதங்களில் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பி செல்கின்றன.

No comments:
Post a Comment