சிவகங்கை வரலாறு
வெள்ளையரை எதிர்த்து குரல் கொடுத்த பாளையக்காரர் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.1746
ஆம் ஆண்டு இராமநாதபுர செல்லமுத்து சேதுபதி மகனான வேலுநாச்சியாரை திருமணம் செய்து கொண்டார்.வேலுநாச்சியார் கல்வி,போர்த்திறமை போன்ற அனைத்திலும் திறமை வாய்ந்தவர்.முத்து வடுகநாதருக்கும் நண்பன்,தத்துவ ஞானி மற்றும் வழிகாட்டியாக செயல்பட்டார்.தாண்டவராய பிள்ளை சிவகங்கை சமஸ்தானத்தின் திறமையான முதல் அமைச்சராக செயல்பட்டார்.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரின் ஏஜெண்டாக விளங்கிவந்த ஆர்க்காட்டு நவாப் கப்பம் கட்டுமாறு சிவகங்கை அரசர் முத்துவடுகநாதருக்கு தூது அனுப்பியிருந்தான். அரசர் முத்துவடுகநாதர்,நவாப் கேட்கும் கப்பத்தைக் கட்டிவிட்டால் அமைதியுடன் ஆட்சி நடத்தலாமே என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.அதனை பட்டத்துராணி வேலுநாட்சியாரிடம் தெரிவித்தார்.அதை கேட்ட வேலுநாச்சியார் வெகுண்டெழுந்தார். "அடிமையாக வாழ்வதில்தான் அமைதி கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட அமைதி நமக்குத் தேவையில்லை.அந்நியனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதால்தான் உண்ண உணவு கிடைக்குமென்றால்,அப்படிப்பட்ட உணவினை உண்டு நாம் உயிர் வாழ்வதைக்காட்டிலும் உயிரை விடுவது எவ்வளவோ மேல்...." என்று பேசினார்,நூறாண்டு காலம் அடிமையாக வாழ்வதைவிட,ஒரே ஒரு நாள் சுதந்திரக்காற்றைச் சுவாசித்துவிட்டு மடிவது எவ்வளவோ மேல் என்று வேலுநாச்சியார் வீரமாகப் பேசினார். அவ்விருவருக்கும் நடந்த உரையாடலை கேட்ட மருது சகோரதர்கள் "மன்னா! மகாராணியார் சொன்ன கருத்துப்படி,எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை"என்று பெரிய மருது கூறினார்.
"தமிழகம் முழுவதும் உள்ள ஜமீன்களை ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டபோதிலும்,மறவர் நாடான "சிவகங்கைச் சீமை" மட்டும் ஆங்கிலேயருக்கு அடிபணியாது நிமிர்ந்து நின்றது என்ற சரித்திரத்தைப் படைப்போம்" என்று சின்ன மருது அறைகூவலிட்டார்.
மூவரது வீர உரைகளையும் கேட்ட மன்னர் வடுகநாதரின் உள்ளத்திலும் ஒரு தெம்பு பிறந்தது.அடிமையாகாமல் ஆட்சி நடத்தப் போரைச் சந்திப்பதே சரியான மார்க்கம் என்ற முடிவுக்கு வந்தார். 'கப்பம் கட்ட முடியாது' என ஆர்க்காட்டு நவாப்புக்கு மறுப்புத் தூது அனுப்பினார். அதுகண்ட ஆர்க்காட்டு நவாப் 'சிவகங்கைச் சீமையைப் பிடித்தலின்றி வேறு வழியில்லை' என்று முடிவு செய்து தனது படையுடன் ஆங்கிலேயப் படையினையும் இணைத்துக் கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். ஆர்க்காட்டு நவாபின் படை சிவகங்கைக்கு ஆரவாரம் செய்துவரும் ஓசைதனைக் கேட்ட வேலுநாச்சியார், "அதோ! நம் சுதந்திர வேள்வியை எரியவைக்கும் விறகுகள் வந்துவிட்டன.அவற்றைக்கொண்டு வான்முட்ட எழும் தீப்பிழம்பை உருவாக்குவோம்" என்று வீரகர்ஜனையிட்டார், வேலுநாச்சியார். படைவீரர்கள் "வீரவேல்", "வெற்றிவேல்" என்று முழக்கமிட்டுத் தங்கள் வாள்களை உயர்த்திக்கொண்டு ஆங்கிலேயப் படையினை எதிர்கொள்ளத் தயாரானார்கள். போர்க்களத்தில் மருது சகோதரர்கள் ஒரு பக்கமும்,மன்னர் வடுகநாதரும் வேலுநாட்சியாரும் மறுபக்கமும் எதிரிகளின் தலைகளை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர். வேலு நாச்சியாரின் பக்கமிருந்த மன்னரைப் பிரித்தால் தான் மன்னரை எளிதில் மடக்க முடியும்; அதன்மூலம் எளிதில் வெற்றி பெறமுடியும் என்று கேப்டன் பான்சோர் திட்டமிட்டான்.சிப்பாய்களிடம் அதற்கான வியூகத்தை அமைத்துக் கொடுத்தான். கேப்டன் அமைத்துக் கொடுத்த வியூகத்தின்படி,வேலு நாச்சியாருக்கு அருகிலிருந்த முத்துவடுகநாதரைப் பிரித்து தனியாகிப் பிரித்துக்கொண்டு வந்தனர். "சிப்பாய்! முத்துவடுகனைச் சுட இதுதான் தக்க தருணம்" என்று கேப்டன் கூறினான்.சிப்பாயும் உடனே சுட்டான். மறைமுகமாகத் தமைத் தாக்கியத்தைகச் சற்றும் எதிர்பாராத மன்னர், அடபாவி! மறைந்து நின்று கோழைத்தனமாகயச் சுட்டுவிட்டாயே! இப்படி இழிவான முறையில் பெறும் ஒரு வெற்றியாகுமா! மானகெட்ட பயலே... . இந்தச் செயல் உனக்குத் தேவைதானா ? தூ...! என்று கேப்டன் பான்சோர் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு, "வேலுநாச்சி.... நம் மண்ணைக் காப்பாற்று!" என்று கூறியபடியே கீழே விழுந்து கண் மூடினார். 25-06-1772 ல் முத்துவடுகநாதர் மறைந்து விட்டார்.அதன் பிறகு வேலுநாட்சியரே சிவகங்கை தலைமை பொறுப்பை ஏற்று கொண்டார்.
கோட்டை மீட்பு :
அதன் வேண்டுதலின் பலனாக சில ஆண்டுகளில் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.வெள்ளையாகக் குழந்தை இருந்தது.குலதெய்வத்தின் பெயர் மருது.அவ்விரண்டையும் இணைத்து 'வெள்ளை மருது' எனப் பெயரிட்டனர்.பிள்ளைச் செல்வதைக் கண்டு அத்தம்பதியனருக்கு மீண்டும் ஐந்தாண்டுகளில் மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. 'மருதீசுவர'னின் வரத்தினால் பிறந்த அக்குழந்தைகளுக்கு 'பெரிய மருது' (1748), 'சின்ன மருது' (1753) என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.குழந்தை பருவம் : பள்ளிக்குச் செல்லும் வயது வந்தவுடன் இருவரும் தனியாக ஒரு குருவிடம் கல்வி கற்று,கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர்.வாள்போர்,விற்போர்,ஈட்டி எறிதல்,களறி வீசுதல்,குதிரையேற்றம் போன்றவைகளில் சிறந்து விளங்கினார். சசிவர்ணத் தேவரின் மறைவிற்குப் பின்பு அவர் மகன் முத்துவடுக நாதத் தேவர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார். அதே போன்று,உடையார் சேர்வை மறைவிற்குப் பின்பு அவர் மகன்களான பெரிய மருது,சின்ன மருது ஆகிய இருவரும் முத்துவடுக நாதத் தேவரின் ஆட்சியில் படைவீரர்களாகச் சேர்ந்தனர். நாச்சியாரின் வேலு நாச்சியாரின் மறைவிற்குப் பின் 'மருது சகோதரர்கள்' சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாடில் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரமாகும்.காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிக பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் உள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
முற்காலத்தில் தமிழகம் சேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு என்ற முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.முப்பெரும் பிரிவுகளில் ஒன்றான பாண்டிய நாட்டில் இராமநாதபுர பகுதியில் பல ஜமீன்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று தான் சிவகங்கை சீமை.அச்சீமை 22-1-1730 ல் தனியாக பிரிக்கப்பட்டது.
இராமநாதபுரத்தை ‘விஜய ரகுநாத சேதுபதி’ என்ற மன்னர் ஆண்டு வந்தார்.அவருக்கு ‘அகிலாண்டேஸ்வரி’ என்ற மகள் ஒருத்தி இருந்தாள்.அவளை நாலு கோட்டையை சேர்ந்த ‘பெரியண்ண உடையனத் தேவர்’ மகன் ‘சசிவர்ணத்தேவர்’ என்பவருக்கு மணமுடித்து கொடுத்தார்.பல ஜமீன்களை வெல்வதற்கு,மன்னர் விஜய ரகு நாத சேதுபதிக்கு சசிவர்ணத்தேவர் உறுதுணையாக இருந்ததாலும்,தன்னுடைய மருமகன் என்ற உரிமையிலும் இராமநாதபுரத்தை ஐந்து பாகங்களாக பிரித்து அவற்றுள் இரண்டு பாகங்களை ‘சிவகங்கைச் சீமை’ என்ற பெயரில் பிரித்து கொடுத்தார்.அன்றையிலிருந்து சிவகங்கைச் சீமையை சசிவர்ணத்தேவர் ஆட்சி செய்துவந்தார்.சசிவர்ணத்தேவர் சிவகங்கை சீமையை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தார்.இவருக்கு முத்து வடுகநாதர் என்ற ஒரு மகன் பிறந்தான்.சசிவர்ணத்தேவர் 1749 ல் மறைந்த பிறகு முத்து வடுகநாதர் சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னராக பதவி வகிக்கிறார்.
வெள்ளையரை எதிர்த்து குரல் கொடுத்த பாளையக்காரர் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.1746
ஆம் ஆண்டு இராமநாதபுர செல்லமுத்து சேதுபதி மகனான வேலுநாச்சியாரை திருமணம் செய்து கொண்டார்.வேலுநாச்சியார் கல்வி,போர்த்திறமை போன்ற அனைத்திலும் திறமை வாய்ந்தவர்.முத்து வடுகநாதருக்கும் நண்பன்,தத்துவ ஞானி மற்றும் வழிகாட்டியாக செயல்பட்டார்.தாண்டவராய பிள்ளை சிவகங்கை சமஸ்தானத்தின் திறமையான முதல் அமைச்சராக செயல்பட்டார்.
ஆட்சி முறை :
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரின் ஏஜெண்டாக விளங்கிவந்த ஆர்க்காட்டு நவாப் கப்பம் கட்டுமாறு சிவகங்கை அரசர் முத்துவடுகநாதருக்கு தூது அனுப்பியிருந்தான். அரசர் முத்துவடுகநாதர்,நவாப் கேட்கும் கப்பத்தைக் கட்டிவிட்டால் அமைதியுடன் ஆட்சி நடத்தலாமே என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.அதனை பட்டத்துராணி வேலுநாட்சியாரிடம் தெரிவித்தார்.அதை கேட்ட வேலுநாச்சியார் வெகுண்டெழுந்தார். "அடிமையாக வாழ்வதில்தான் அமைதி கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட அமைதி நமக்குத் தேவையில்லை.அந்நியனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதால்தான் உண்ண உணவு கிடைக்குமென்றால்,அப்படிப்பட்ட உணவினை உண்டு நாம் உயிர் வாழ்வதைக்காட்டிலும் உயிரை விடுவது எவ்வளவோ மேல்...." என்று பேசினார்,நூறாண்டு காலம் அடிமையாக வாழ்வதைவிட,ஒரே ஒரு நாள் சுதந்திரக்காற்றைச் சுவாசித்துவிட்டு மடிவது எவ்வளவோ மேல் என்று வேலுநாச்சியார் வீரமாகப் பேசினார். அவ்விருவருக்கும் நடந்த உரையாடலை கேட்ட மருது சகோரதர்கள் "மன்னா! மகாராணியார் சொன்ன கருத்துப்படி,எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை"என்று பெரிய மருது கூறினார்.
"தமிழகம் முழுவதும் உள்ள ஜமீன்களை ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டபோதிலும்,மறவர் நாடான "சிவகங்கைச் சீமை" மட்டும் ஆங்கிலேயருக்கு அடிபணியாது நிமிர்ந்து நின்றது என்ற சரித்திரத்தைப் படைப்போம்" என்று சின்ன மருது அறைகூவலிட்டார்.
மூவரது வீர உரைகளையும் கேட்ட மன்னர் வடுகநாதரின் உள்ளத்திலும் ஒரு தெம்பு பிறந்தது.அடிமையாகாமல் ஆட்சி நடத்தப் போரைச் சந்திப்பதே சரியான மார்க்கம் என்ற முடிவுக்கு வந்தார். 'கப்பம் கட்ட முடியாது' என ஆர்க்காட்டு நவாப்புக்கு மறுப்புத் தூது அனுப்பினார். அதுகண்ட ஆர்க்காட்டு நவாப் 'சிவகங்கைச் சீமையைப் பிடித்தலின்றி வேறு வழியில்லை' என்று முடிவு செய்து தனது படையுடன் ஆங்கிலேயப் படையினையும் இணைத்துக் கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். ஆர்க்காட்டு நவாபின் படை சிவகங்கைக்கு ஆரவாரம் செய்துவரும் ஓசைதனைக் கேட்ட வேலுநாச்சியார், "அதோ! நம் சுதந்திர வேள்வியை எரியவைக்கும் விறகுகள் வந்துவிட்டன.அவற்றைக்கொண்டு வான்முட்ட எழும் தீப்பிழம்பை உருவாக்குவோம்" என்று வீரகர்ஜனையிட்டார், வேலுநாச்சியார். படைவீரர்கள் "வீரவேல்", "வெற்றிவேல்" என்று முழக்கமிட்டுத் தங்கள் வாள்களை உயர்த்திக்கொண்டு ஆங்கிலேயப் படையினை எதிர்கொள்ளத் தயாரானார்கள். போர்க்களத்தில் மருது சகோதரர்கள் ஒரு பக்கமும்,மன்னர் வடுகநாதரும் வேலுநாட்சியாரும் மறுபக்கமும் எதிரிகளின் தலைகளை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர். வேலு நாச்சியாரின் பக்கமிருந்த மன்னரைப் பிரித்தால் தான் மன்னரை எளிதில் மடக்க முடியும்; அதன்மூலம் எளிதில் வெற்றி பெறமுடியும் என்று கேப்டன் பான்சோர் திட்டமிட்டான்.சிப்பாய்களிடம் அதற்கான வியூகத்தை அமைத்துக் கொடுத்தான். கேப்டன் அமைத்துக் கொடுத்த வியூகத்தின்படி,வேலு நாச்சியாருக்கு அருகிலிருந்த முத்துவடுகநாதரைப் பிரித்து தனியாகிப் பிரித்துக்கொண்டு வந்தனர். "சிப்பாய்! முத்துவடுகனைச் சுட இதுதான் தக்க தருணம்" என்று கேப்டன் கூறினான்.சிப்பாயும் உடனே சுட்டான். மறைமுகமாகத் தமைத் தாக்கியத்தைகச் சற்றும் எதிர்பாராத மன்னர், அடபாவி! மறைந்து நின்று கோழைத்தனமாகயச் சுட்டுவிட்டாயே! இப்படி இழிவான முறையில் பெறும் ஒரு வெற்றியாகுமா! மானகெட்ட பயலே... . இந்தச் செயல் உனக்குத் தேவைதானா ? தூ...! என்று கேப்டன் பான்சோர் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு, "வேலுநாச்சி.... நம் மண்ணைக் காப்பாற்று!" என்று கூறியபடியே கீழே விழுந்து கண் மூடினார். 25-06-1772 ல் முத்துவடுகநாதர் மறைந்து விட்டார்.அதன் பிறகு வேலுநாட்சியரே சிவகங்கை தலைமை பொறுப்பை ஏற்று கொண்டார்.
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை "வீரமங்கை இராணி வேலு நாச்சியார்".ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட முத்துவடுகநாதருக்குப் பின்னர், கிபி 1780 ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின் ராணியாக முடி சுட்டப்பட்டார்.
பிறப்பு:
1730 ஆம் ஆண்டு,இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி- முத்தாத்தாளுக்கு ஓரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார்.வேலுநாச்சியார் பிறந்தது இராமநாதபுரத்துக்கு அருகிலுள்ள 'சக்கந்தி' என்ற என்ற ஊரில் பிறந்தார்.இவர் பெண்ணாகவே இருந்தாலும் ஒரு ஆண் பிள்ளையை போலவே வளர்க்கப்பட்டார்.
திறமை:
வேலுநாச்சியார் மகாபாரதம்,இராமாயணம்,இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்று தேர்ந்தவர்.மேலும் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி,உருது,அரபி,பிரென்ச்,ஆங்கிலம்,ஜெர்மன் போன்ற பத்து வகையான மொழிகள் பேசக்கற்றவர். போர்க்கலையிலும்,வாள் சண்டை,வில்வித்தை,யானையேற்றம்,வளைதடி போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார்.போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் திறமை வாய்ந்தவர். "ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாகவும் திகழ்ந்தார் வேலுநாச்சியார்.வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த முத்துவடுகநாதர் 1746 ஆம் ஆண்டு வேலு நாச்சியாரை திருமணம் செய்து கொண்டார்.சிவகங்கைச் சீமையை சீரும் சிறப்புமாக வழிநடத்தி வந்தனர்.
மன்னர் மரணம் :
ஆங்கிலய போரில் முத்துவடுகநாதர் சுட்டு கொல்லப்பட்டார்.மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் வேலு நாச்சியார் கதறி அழுதார்.கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார்.தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். 'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.
வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு "சின்ன மருதை தளபதியாகவும்", இன்னொரு படைக்கு "பெரிய மருதுவுடன்" இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
அரியணை ஏறுதல் :
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.இறுதி நாட்கள் :-1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்ம னையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்றுஇறந்தார். வீரமங்கை வேலுநாச்சியார்.கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழி தீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார். வேலு நாச்சியார் மரணம் அடைந்த பிறகு "சிவகங்கைச் சீமையின்" ஆட்சி பொறுப்பினை மருது சகோதரர்கள் ஏற்று கொண்டனர்.
மருது
சகோதரர்கள் வரலாறு
சசிவர்ணத் தேவரின் அரசாட்சியில் பணியாற்றி வந்தவர் மொக்கப் பழனியப்பன் சேர்வை என்ற உடையார் சேர்வை.அவர் பொன்னாத்தாள் என்னும் பெண்ணை மணமுடித்திருந்தார்.பல ஆண்டுகளாக அத்ததம்பதியனருக்குக் குழந்தை பிறக்கவில்லை.வைகை நதிக் கரையோரம்,சிவகங்கைக்கு அருகேயுள்ள கீழவாணியங்குடி என்னும் கிராமத்தில்,மருதமரங்கள் சூழ்ந்த; சோலையில்,பெரிய மரத்தின் அடியில் 'மருதீசுவரர்' என்னும் கோவில் இருந்தது.அக்கோவிலில் அத்தம்பதியனர் காலையும் மாலையும் பால் அபிஷேகம் செய்து,பிள்ளை வரம் வேண்டி வணங்கி வந்தனர்.
அதன் வேண்டுதலின் பலனாக சில ஆண்டுகளில் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.வெள்ளையாகக் குழந்தை இருந்தது.குலதெய்வத்தின் பெயர் மருது.அவ்விரண்டையும் இணைத்து 'வெள்ளை மருது' எனப் பெயரிட்டனர்.பிள்ளைச் செல்வதைக் கண்டு அத்தம்பதியனருக்கு மீண்டும் ஐந்தாண்டுகளில் மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. 'மருதீசுவர'னின் வரத்தினால் பிறந்த அக்குழந்தைகளுக்கு 'பெரிய மருது' (1748), 'சின்ன மருது' (1753) என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.குழந்தை பருவம் : பள்ளிக்குச் செல்லும் வயது வந்தவுடன் இருவரும் தனியாக ஒரு குருவிடம் கல்வி கற்று,கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர்.வாள்போர்,விற்போர்,ஈட்டி எறிதல்,களறி வீசுதல்,குதிரையேற்றம் போன்றவைகளில் சிறந்து விளங்கினார். சசிவர்ணத் தேவரின் மறைவிற்குப் பின்பு அவர் மகன் முத்துவடுக நாதத் தேவர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார். அதே போன்று,உடையார் சேர்வை மறைவிற்குப் பின்பு அவர் மகன்களான பெரிய மருது,சின்ன மருது ஆகிய இருவரும் முத்துவடுக நாதத் தேவரின் ஆட்சியில் படைவீரர்களாகச் சேர்ந்தனர். நாச்சியாரின் வேலு நாச்சியாரின் மறைவிற்குப் பின் 'மருது சகோதரர்கள்' சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்தனர்.
பணிகள்
:
பசியும் பிணியும இல்லாத நாடக உருவாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டனர்.உழைக்காமல் உண்பவரையோ,பிச்சையெடுத்து உண்பவரையோ நாட்டில் எங்கும் காணமுடியாத நிலையினை உருவாக்கினார். ஆங்காங்கே கிணறு,ஏரி,குளங்கள் ஆகியவற்றை வெட்டி அமைத்து நீர்வளத்தை பெருக்கினார்.அதனால் நன்செய் நிலங்கள் அதிகமாயின.பல கோவில்களைக் கட்டினார்.புராதனமான கோவில்களுக்கு பல திருப்பணிகளை செய்தனர். திருப்பத்தூருக்கு அருகிலுள்ள குன்றக்குடி குன்றின் மீது கோவில் ஒன்றைக் கட்டினார்.அக்கோவிலின் மேற்பகுதியில் மண்டபங்கள் கட்டினார்.கோவிலின் அருகே குளம் ஒன்றினை உருவாக்கி பல படித்துறைகளை அமைத்தனர்.அக்குளத்திற்கு 'மருதாபுரி' என்று அழைக்கப்பட்டது.அதன் கரையில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வளரச் செய்தனர். காளையார்கோவிலை பழுது பார்த்தனர்.அங்கிருந்த 'யானைமடு' என்னும் தீர்த்தத்தையும் செப்பனிட்டார்கள்.நாற்புறமும் அத்தீர்த்தத்துக்குப் படித்துறைகளை அமைத்தனர்.கோபுரம் அமைத்தனர்.கோபுரம் கட்டுவதற்கு வெகு தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டியதிருந்தது.அதனால் வழி முழுவதும் ஓர் அடிக்கு ஓர் ஆள்வீதம் நிர்க்கச் செய்து,செங்கற்களை வரவழைத்துக் கட்டினார். தொழிலாளர்களுக்கு அவளும் கடலையும் தண்ணீரும் கொடுத்துக் களைப்பை நீக்கினர். பகலில் கூட இருள் சூழ்ந்த நிலையில் வான் உயர்ந்த மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள அக்கோவிலுக்கு ஒரு தேர் செய்ய விரும்பினர்.அதற்காக ஒரு சிற்பியை வரவழைத்து கட்டினர்.சிற்பி 'அச்சுக்கு மரம் தேவை' என்று கூறினார். சேவர்களை வரவழைத்து அச்சுக்கு வேண்டிய மரத்தைப் பார்த்து வருமாறு ஆணையிட்டு அனுப்பினார்.
திருப்புவனம் பகுதியில்,வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள ஆலயத்துக்கு முன்பு,பழமைவாய்ந்த பெரிய 'மருத மரம்' இருப்பதைக் கண்டனர்.மன்னர் அதனை வெட்டிக் கொண்டுவருமாறு கூறினார். மரத்தை வெட்ட முயன்ற பொழுது குருக்கள் ஒருவர் இந்த மரத்தை வெட்டாதீர்கள் என்று தடுத்தார்.சேவகர்கள் உடனே மன்னரிடம் நடந்ததை கூறினர்.மன்னர் உடனே அந்த குருக்களை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.குருக்கள் மன்னரை பார்க்க வந்தனர்.மன்னர் குருக்களிடம் ஏன் மரத்தை வெட்டக்கூடாது என்று தடுத்தீர்கள் என்று கேட்டார்.குருக்கள், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு மக்கள் இங்குதான் கூடுவார்கள்,எ மற்ற நாட்களில் ஆடு,மாடு மேய்ப்பவர்கள் இங்குதான் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள்,என்று நிறைய காரணங்களை கூறினார்.மன்னர்,உடனே இந்த மரம் இங்கே இருக்கட்டும்.தேர் செய்வதற்கு வேறு மரத்தை வெட்டிக்கொள்கிறோம் என்று கூறினார்.வேறு மரத்தை வெட்டி தேர் செய்ய தயாராகுங்கள் என்று உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் ' பாஞ்சாலங்குறிச்சி' என்ற ஜமீனை 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்னும் மன்னர் ஆண்டு வந்தார்.அவரிடம் கப்பம் கட்ட சொல்லி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் வந்தனர்.கப்பம் கட்ட மறுத்ததால் கட்டபொம்மன் நாட்டின் மீது படையெடுத்தனர்.ஆங்கிலேயரால் கட்டபொம்மனை வெல்ல முடியவில்லை.வஞ்சனை மூலம் வெல்லலாம் என்று நினைத்து அவரைச் சிறைபிடித்து ' கயத்தாறு' என்னும் இடத்தில் தூக்கிலிட்டனர்.அவர் தம்பியான 'ஊமைத்துரையை' பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தனர்.பல பல வீரர்கள் ஒன்று திரண்டு அவரை மீட்டனர்.பாஞ்சாலங்குறிச்சி ஜமீனாக ஊமைத்துரை பொறுப்பேற்றார்.மீண்டும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் கப்பம் கட்ட வேண்டும் என்றனர்.,இருவருக்கும் இடையே போர் ஏற்பட்டதில் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியை இழந்தார்.இதனால் சிவகங்கைச் சீமையின் பகுதியான 'கமுதி' பக்கம் தங்கியிருந்தார்.
இதை அறிந்த மருது பாண்டியர் ஊமைத்துரையை சிவகங்கைச் சீமைக்கு அலைத்து வந்தார்.ஆங்கிலக் கம்பெனியாரின் வசமுள்ள இராமநாதபுரம் ஜமீனை முதலில் மீட்பதற்கான வழிகளை ஊமைத்துரையும் மருது பாண்டியரும் வகுத்தனர்.போருக்கு ஆயத்தமாயின.கடும்போர் நடந்தது.மருது பாண்டியரும்,ஊமைத்துரையும் மிகத் தந்திரமாக அப்படைகளை வளைக்கத் தொடங்கினர்.
'உயிர் தப்பித்தால் போதும்' என்று ஆங்கிலப் படைகள் ஒடத் தொடங்கினர்.ஆனால் அவர்கள் சும்மா இல்லாமல் வழியில் உள்ள கிராமத்தை எல்லாம் தீ வைத்ததோடு அப்பாவி மக்களையெல்லாம் இழுத்துக்கொண்டு சிறையில் அடைத்தனர்.
போரில் பெரிய மருது :
அரசனேந்தல் என்னும் ஊரில் பெரிய மருது வேட்டையாடுவதில் கலங்கடத்தி வந்தார்.போர் நடைபெறுவதை கேள்வி பட்டு 'தம்பி,தளராதே நான் போரில் கலந்து கொள்கிறேன் என்று சின்ன மருதுவுக்கு அனுப்பிவிட்டு,பெரிய மருது படை திரட்டினார்.
மருது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து போர் புரிந்தனர்.கம்பெனிப் படைவீரர்கள் போரில் வெடிமருந்தைப் பயன்படுத்தினர்;மருது பாண்டிய படைவீரர் வாள்கொண்டும் வேல்கொண்டும் கடுமையாகப் போரிட்டனர்.இருபக்கங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது;தலைகள் துண்டிக்கப்பட்டன;கால்கள் வெட்டப்பட்டன;பல கொலைகள் நேர்ந்தன. போரின் முடிவில் மருது சகோதரர்கள்கைது செய்யப்பட்டனர்.சங்கிலியால் இழுத்து போர்களால் இழுத்து வரப்பட்டனர்.
பெரிய மருதுவின் வீர உறை :
வழக்கு விசாரணை மன்றத்திலிருந்த கர்னல் அக்நனியூ பெரிய மருதுவைப் பார்த்து,"இந்த மன்றம் எதற்காக கூட்டப்பட்டிருக்கிறது தெரியுமா?" என்று கேட்டான்.
"ஓ! தெரியுமே.....விருது கட்டி வாழ்ந்த எங்கள் வரலாற்றை குழி தோண்டி புதைக்கக் கூட்டப் பட்டிருக்கிறது"
என்று ஆவேசகமாக பேசினான்.
கர்னல்,நான் நினைத்தால் இப்போதே உன்னைச் சுட்டுப் பொசுக்கிவிடுவேன்..."என்றான்.
" கூண்டிலிருக்கும் சிங்கத்திடம் வீரம் பேசும் வீணனே!என் கட்டுகளை அவிழ்த்துவிட்டுப் பார்.வாழ் கூட வேண்டாம்.எத்தனை எத்தனையோ வேங்கைகளை வீழ்த்திய என் கரங்களே போதும்.ஊர் பேர் தெரியாத நீ இங்கே ஆரவாரம் செய்யும் உன் நெஞ்சைப் பிளந்து,இரத்தத்தை அள்ளிக் குடித்து என் சுதந்திர தாகத்தைகத் தணித்துக்கொள்வேன்."
வீண் கதை வேண்டா.உன் தம்பி சின்ன மருது,ஊமைத்துரை ஆகியோருக்கு நீதீதேவன் மீது பரத்தைப் போட்டுத் தூக்குத்தண்டனை விதிக்கிறேன்."என்றான் கர்னல் அக்னியூ.உங்கள் கடைசி ஆசை என்ன?...என்றான்.
கடைசி ஆசை :
"மன்னர் முத்துவடுக நாதர் போரில் இறந்துவிட்டதலும்,அவர் மகள் வெள்ளச்சி நாச்சியார் இளம்வயதினராய் இருந்ததாலும்,உயர்குடியில் பிறந்த அரசகுலப் பெண்கள் தங்களை முழுமையாக அரசாட்சில் ஈடுபடுத்திக்கொள்ள முடியாத காரணத்தினால் ராணி வேலு நாச்சியார் எங்களிடம் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்தார்.அதனால் "சிவகங்கைச் சீமை" எங்களுக்கே உரியது.எனக்கு வேட்டையாடுவதில் நாட்டம் இருந்ததால் ஆட்சிப் பொறுப்பினை சின்ன மருதுவிடம் ஒப்படைத்தேன்.எங்களுக்குப் பின் இந்த ஜமீன் எங்கள் வாரிசுக்கே சேர வேண்டும்.எங்களால் கட்டப்பட்ட சத்திரங்கள்,கோவில்கள்,கோவில்களுக்கு ஒதுக்கப்படுள்ள மானியங்கள் எதையும் பறிக்க கூடாது.நாங்கள் நடத்தி வந்த தர்மநிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்,நான் கொடுத்த வாக்குமூலத்தினை நிறைவேற்றுவதாகக் கம்பெனித் தளபதி அக்நனியூ கத்தியை தொட்டுச் சத்தியம் செய்து தரவேண்டும்" என்றார், பெரிய மருது.
பெரிய மருது கேட்டபடி கர்னல் அக்நனியூ,தனது உடைவாளைத் தொட்டுச் சத்தியம் செய்து கொடுத்தான்.
இறப்பு :
24-10-1801
அன்று பெரிய மருது,சின்ன மருது மேலும் பலர் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
No comments:
Post a Comment